வீதியில் தொலைபேசி பார்த்தால் தண்டப்பணம்- அமுலாகியது சட்டம்!

Sunday, October 29th, 2017

அமெரிக்க பிராந்தியமான ஹவாயில் உள்ள ஹொனோலுலு நகரம் சாலைகளைக் கடக்கும்போது, பாதசாரிகள் தங்கள் மின்னணு உபரகாரணங்கள் அல்லது கைபேசி ஆகியவற்றைப் பார்க்க தடை செய்துள்ளது.

இப்படியொரு சட்டம் வருவது இதுதான் முதல் முறை.இந்த மசோதா ஜூலை மாதம் சட்டமாக நிறைவேறியது. கடந்த செவ்வாயன்று அமலுக்கு வந்தது. இது கவனக்குறைவால் சாலையில் நடக்கும் விபத்துகளை தவிர்ப்பதற்கான ஒரு முன்மாதிரி முயற்சி ஆகும்.

முதன் முறை சட்டத்தை மீறுபவர்களிடம் 15 டாலர் முதல் 35 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும். திரும்ப தவறு செய்பவர்களுக்கு 99 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

அவசர சேவை இணைப்புகள் குறித்த இந்த தடையில் உள்ளடங்காது.

குறித்த இந்தச் சட்டத்தின்படி நடந்து செல்லும் நபர்கள் சாலைகளை அல்லது நெடுஞ்சாலை கடக்கும்போது, நடந்து செல்லும் நபர்கள் சாலைகளை அல்லது நெடுஞ்சாலை கடக்கும்போது எவ்வித மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது.

Related posts: