வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்!

Wednesday, February 14th, 2018

முன்னணி மெசேஜ் அப்பிளிக்கேஷான வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கணவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த தகவல்கள் வெளிவந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இச் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சேவையினை iOS மற்றும் Android சாதனங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாதிருப்பதுடன் Unified Payments Interface (UPI) எனப்படும் தனிநபர் பணப்பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இவ் வசதியானது வாட்ஸ் ஆப் செயலியின் Setting பகுதியில் தரப்பட்டுள்ளது.

இப் பகுதிக்கு சென்று வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களை கொடுத்து ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும்.

தற்போது HDFC, Axis, ICICI, SBI, Yes Bank, Allahabad Bank, Punjab National Bank ஆகிய சில பிரபல வங்கிக்கணக்குகளை மாத்திரம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Related posts: