வரும் 14ஆம் திகதி வானில் அதிசயம்!

Friday, November 4th, 2016

எதிர்வரும் 14ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று ‘super moon’ சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இறுதியாக 1948ஆம் ஆண்டு இந்த அதிசயம் நடந்துள்ளது.

பௌர்ணமி நாளான அன்று நிலவு பூமிக்கு மிக மிக அருகே வரவுள்ளது.இதனால் அன்றைய தினம் ‘super moon’ அதாவது நிலா மிகப் பெரியதாக காணப்படும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் எதிர்வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று வழக்கத்தை விட நிலவு பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த பெரிய நிலாவைக் காண தவறினால் இன்னும் 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த அதிசயம் இனி 2034ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதிதான் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

full_moon

Related posts: