25 அடி இராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்துண்ட கிராம மக்கள்!

Friday, October 6th, 2017

இந்தோனேசியாவில் 25 அடி இராட்சத மலைப்பாம்பை கிராம மக்கள் கொன்று விருந்தாக உண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன, அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது 25 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது, அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த இராட்சத பாம்பை பிடித்த கிராம மக்கள் அதனை கொன்று சமைத்து விருந்தாக்கியுள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுவாக மலைப்பாம்பு 20 அடி இருக்கும். இது மிகப்பெரிய மலைப்பாம்பு என கூறியுள்ளனர்.

Related posts: