உலகின் மிக பெரிய விமானங்கள்!

Tuesday, August 30th, 2016

இன்றைய திகதியில் உலகின் மிகப்பெரிய விமானங்கள் எவை என தெரியுமா? மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏ என் – 225 மிரியா பற்றியும் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ்-380 பற்றியும் சில தகவல்கள்.

அன்டனோவ் .என்225 மிரியா

சோவியத் கூட்டமைப்பில் செயல்பட்டு வந்த அன்டோனோவ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வகை விமானங்கள் 1988 முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவே இந்த வகையிலான விமானங்கள் வடிவமைக்கப்பட்டன. சோவியத் ராணுவத்திற்கும் பெருமளவில் பயன்பட்டு வந்தது.

உலகிலேயே மிகவும் அதிகமான எடை கொண்ட விமானம் இது தான். சரக்குகள் இல்லாமல் இதன் மொத்த எடை 2,85,000 கிலோ கிராம். அன்டோனோவ் ஏ என்225 விமானத்தின் மொத்த நீளம் 275 அடிகள்.

இதன் உயரம் தோராயமாக 59 அடி . ஒரு விமானத்தில் மொத்தம் ஆறு என்ஜின்கள், 32 சக்கரங்கள் விமானத்தில் உள்ளன. இந்த விமானத்தின் இறக்கைகளின் நீளம் மொத்தம் 290 அடிகள். மிரியா என்பதற்கு உக்ரைன் மொழியில் ‘கனவு’ என்று அர்த்தம்…!

ஏர் பஸ் 380

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர் பஸ் ஏ380. ஏர் பஸ் விமானம் பிரான்ஸ் நாட்டின் ஏர் பஸ் நிறுவன தயாரிப்பாகும். ஏர் பஸ் விமானத்தில் ஒரே நேரத்தில் சுமாராக 600 பயணிகள் பயணிக்க முடியுமாம்.

மொத்தம் நான்கு என்ஜின்கள் செயல்படுகின்றன. அதில் இரண்டு இன்ஜின்கள் மட்டுமே விமானம் தரையிறங்கும் பொழுது செயல்பாட்டில் இருக்குமாம். போயிங் ரக விமானங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டதே ஏர் பஸ் 380 ரக விமானங்கள். தோராயமாக 580 தொன் எடை கொண்டது ஏர் பஸ் விமானம்.

ஏர் பஸ் விமானங்கள் அதிகபட்சமாக 40,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும். சூப்பர் ஜம்போ ரக விமானங்கள் என்றழைக்கப்படும்.

இவற்றை எல்லா ஓடுபாதைகளிலும் தரையிறக்க முடியாது. அதற்காக வடிவமைக்கப்பட்ட விமான ஓடுதளங்களில் மட்டுமே தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: