வருகின்றது 12GB ரம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர வாய்ப்பு!

Monday, September 5th, 2016

சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த ‘டுரிங் ரோபோட்டிக்’ என்ற ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக 12 GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ‘டுரிங் போன் கன்டென்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. பல முன்னணி தொழில்நுட்ப இணையதளங்கள் இந்த போனை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், இதுகுறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.  தற்போதைக்கு இந்த போன் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் பின்வருமாறு:-

60 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமிராவும், 20 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமிராவும் இந்த போனில் இடம்பெறுகிறது. தனித்தனியாக இரண்டு 256 GB ஸ்டோரேஜ் வசதிகளும், மெமரி கார்டு மூலம் 500 GB வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. மொத்தம் 1 TB ஸ்டோரேஜ் வசதி உள்ள இந்த போனில் 4 சிம்கார்டுகளை பயன்படுத்த முடியும். செயற்கை அறிவுத்திறனுடன் கூடிய சக்தி வாய்ந்த பிராசசர் இந்த போனில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய பேட்டரிகளை விட 3 மடங்கு அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஷன் பியூயல்களால் உருவாக்கப்பட்ட பேட்டரியும், கைரேகை மூலம் போனை லாக் செய்யும் பயோமெட்ரிக், பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதிகளும் உண்டு. வாய்ஸ் மூலம் போனை ‘ஆன்’ மற்றும் ‘ஆப்’ செய்யும் வசதி இருப்பினும் இந்த போன் முதலில் ஸ்வார்டுபிஷ் என்ற இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் என கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 copy

Related posts: