மைக்ரொசொப்ட் எட்ஜில் விளம்பரங்களை தடைசெய்யும் வசதி!

Sunday, April 10th, 2016

மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்திருந்த மைக்ரோசொப்ட் எட்ஜ் இணைய உலாவியல் விளம்பரங்களை தடைசெய்யும் வசதியினை தரவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிருந்தமை தெரிந்ததே.

இந் நிலையில் இவ் வசதியானது இதுவரை இல்லாத அளவிற்கு சற்று வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது.

அதாவது Adobe Flash இன் ஊடாக அனிமேசன் மற்றும் வீடியோவாக தென்படும் விளம்பரங்களை தானாகவே நிறுத்தக்கூடிய வகையில் இந்த புதிய வசதி காணப்படுகின்றது.எனினும் பயனர் ஒருவர் குறித்த விளம்பரத்தை பார்வையிட வேண்டும் எனின் அவ் விளம்பரத்தின் மீது கிளிக் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக செயற்பட வைக்க முடியும்.

இதேவேளை கூகுள் குரோம் இணைய உலாவியின் 42வது பதிப்பிலும் இவ்வாறானதொரு வசதி தரப்பட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: