பேஸ்புக்கின் EXPLORE FEED முறை தொடர்பில் இறுதி தீர்மானம்! 

Sunday, March 4th, 2018

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டிருந்த சோதனையோட்டம் தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பேஸ்புக்கில் News Feed க்கு மேலதிகமாக Explore Feed எனும் பதம் இணைக்கப்பட்டு அது சோதனைக்கு விடப்பட்டது. இதன்மூலம் சில page பதிவுகளைகாணவேண்டும் என்றால் நீங்கள் இந்த  Explore Feed ஊடாக காணவேண்டியிருந்தது.

இலங்கை, பொலீவியா, காம்போடியா, கோதமாலா, சர்பியா, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கு இந்த Explore Feed முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த Explore Feed முறை கடந்த சில மாதங்களாக சோதனைக்கு விடப்பட்டிருந்த போதும், அது நினைத்த அளவிற்கு வெற்றி அளிக்காததால் குறித்த செயன்முறையை பேஸ்புக்கில் இருந்து அகற்றபேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: