முதலாவது முழுநேர ஆளில்லா விமான பொலிஸ் பிரிவு ஆரம்பம்!

Monday, July 17th, 2017

பிரிட்டன் பொலிஸார் தமது முதலாவது முழுநேர ஆளில்லா விமானப்பிரிவை ஆரம்பித்துள்ளனர். Drone எனப்படும் இந்த ஆளில்லா விமான பொலிஸ் பிரிவு, காணாமற்போனவர்கள் தொடர்பிலும் சாலை விபத்துகள் குறித்தும் பெரிய குற்றச்சம்பவங்களைப் புலனாய்வதற்கும் உதவுமென நம்பப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானப்படைப்பிரிவு என்பது கேள்விப்படாத ஒன்று. ஆனால், இன்று இங்கிலாந்தின் இரண்டு காவல்துறை சரகங்கள் இணைந்து பிரிட்டனின் முதலாவது முழுநேர ஆளில்லா விமானப்படைப் பிரிவை உருவாக்கியுள்ளன. அதன் ஆளில்லா விமானங்கள் ஐந்தும் 24 மணிநேரமும் செயற்படும்.

முன்பு ஹெலிகாப்டர்களால் மட்டுமே செய்ய முடிந்த இத்தகைய செயல்களை இப்போது ட்ரோன்கள் செய்கின்றன. ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடுகையில், ஆளில்லா விமானங்களுக்கு மிகக்குறைந்த செலவே ஏற்படுகின்றது. அவை படம்பிடிக்கும் காட்சிகளை பொலிஸாரின் மத்திய கண்காணிப்பு அறைகளுக்கு நேரலையாக அனுப்பும் வசதியும் விரைவில் வருமென அதிகாரிகள் நம்புகின்றனர்.

Related posts: