30 கோடி ஆண்டு பழமையான திருகாணி!

Monday, August 1st, 2016

2002 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் வரலாற்றுக்கு முந்தைய நாகரிகத்திற்கான ஆதாரமாக இருக்கலாம் எனச் சீன செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு தெய்தி தொகுப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று கிடைக்கப்பெறும் மர்ம பொருள்கள் பல்வேறு பழமை வாய்ந்த நாகரீகத்தின் ஆதாரமாக இருப்பதோடு அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மற்றும் இதர கருவிகள் குறித்துப் பலத்த சந்தேகங்களையும் எழுப்புகின்றது.

லான்ஸ்ஹௌ திருகாணியும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் என்பதோடு, இது பல்வேறு வரலாறு மற்றும் தொல்லியல் துறைக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

2002 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த மர்ம பொருள் இன்று வரை பல்வேறு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.

கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் சிறிய கல் மற்றும் உலோகத்திலான திருகாணி ஆகும். 6*8 செ.மீ அளவில் சுமார் 466 கிராம் எடை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கண்டெடுக்கப்பட்டது சிறிய கல் மற்றும் உலோக திருகாணி என்பதோடு, ஆய்வாளர்களின் படி இவை சுமார் 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பொருள் வெறும் கல் தான் என்பதோடு இன்று வரை ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது.

பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களும் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டும் இன்று வரை இந்தக் கல் உருவான கலவை கண்டறிய முடியவில்லை.

400-2-300x225

லான்ஸ்ஹௌ செய்தியின் படி மனிதன் உருவாக்கியதாகக் கருதப்படும் இந்தக் கல் மற்றும் திருகாணி ஆய்வு, தொல்லியல் கல்வி மற்றும் சேகரிப்புகளுக்கு சீனாவின் மிகவும் மதிப்பு மிக்க பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம கல் தோற்றம் மற்றும் அதனுள் செலுத்தப்பட்டிருந்த 6 செ.மீ முக்கோண வடிவிலான திருகாணியை விளக்க பல்வேறு கோட்பாடுகள் இயற்றப்பட்டன.

பல்வேறு ஆய்வாளர்களும் இந்த மர்ம பொருள் வரலாற்றுக்கு முந்தைய நாகரிகத்தினர் பயன்படுத்தியிருக்கலாம் என நம்புகின்றனர்.

மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கல் மற்றும் உலோக திருகாணி வேறொரு கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

சீன ஆய்வாளர்களின் பல்வேறு ஆய்வுகளின் படி இந்தக் கல் மற்றும் திருகாணி மனித கை அல்லது தற்சமயம் இருக்கும் தொழில்நுட்ப கருவிகளின் மூலம் கட்டமைக்கப்பட இயலாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் இந்தக் கல் மற்றும் திருகாணி வரலாற்றுக்கு முந்தைய நாகரிகத்தினருடையது என்றே நம்புகின்றனர் என்றாலும் ஆய்வாளர்களால் இந்தத் திருகாணி எவ்வித உலோகம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியாமலேயே இருக்கின்றது.

சீனாவின் புவியமைப்பியல் மற்றும் கனிமங்கள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டெடுக்கப்பட்ட கல்லினுள் இருக்கும் லாஸ்ஹௌ திருகாணி இன்றைய தேதியில் இருந்து சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

லான்ஸ்ஹௌ திருகாணியும் 90களில் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட திருகாணிக்கும் ஒரே மாதிரியான வரலாறு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

லான்ஸ்ஹௌ திருகாணியும் 90களில் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட திருகாணிக்கும் ஒரே மாதிரியான வரலாறு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

300-2-300x225

ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட திருகாணியும் கல் ஒன்றில் செலுத்தப்பட்டிருந்தது. இந்தத் திருகாணி கலுகா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட கல் மீது சோதனை செய்ததில் பல்வேறு திருகாணிகள் செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் ரஷ்யா திருகாணியும் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட திருகாணியும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இது போன்ற கண்டுபிடிப்புகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி இன்று நாம் பார்ப்பதை விட முற்றிலும் வித்தியாசமாக இருந்ததையே விளக்குவதாக அமைகின்றது.

சீனா மற்றும் ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்கள் நமக்கு முன் மிகவும் மேம்பட்ட நாகரீகத்தினர் இன்று நாம் பயன்படுத்துவதை விட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகின்றது.

வரலாற்றையே மாற்றியமைக்கும் தன்மை கொண்ட இது போன்ற கண்டுபிடிப்புகள் வரும் காலங்கள் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டு ரகசியமான முறையில் அவை குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Related posts: