ஆடைகளின் நிறம் மாற்றத்திற்கு புதிய கண்டுபிடிப்பு!

Tuesday, May 10th, 2016
நீங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் உங்கள் ஆடைத் தேர்வை நினைந்து வருந்தியதுண்டா? கவலையை விடுங்கள், இது உங்களுக்காகத் தான்.
லண்டன் ஆராய்ச்சியாளர்களால் அண்மையில் நிறம் மாறக்கூடிய நூல் இழையைக் கண்டுபிடித்துள்ளனர்.இது ஒரு கறுப்பு ஆடையை பச்சையாக மட்டுமல்ல ஆடையின் லோகோவை கூட உங்களால் மாற்றமுடியும்.
இப் புதிய தொழில்நுட்பமானது படிப்படியாக வெவ்வேறு வகை ஆடைகளின் வருகைக்கு நிச்சயம் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
இங்கு ஏற்படும் நிறமாற்றமானது மின் ஏற்றங்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. இதன் அடுத்த கட்டமாக நம் மனநிலைக்கேற்ப தானாகவே நிறம் மாறக்கூடியதாகவும், சட்டையின் மணிக்கட்டுப் பகுதியில் மொமைல் குறுஞ்செய்தி, தவறிய அழைப்புக்களை பார்வையிடக்கூடியதாகவும் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமானது தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகவாகும்.

Related posts: