மின்சார கார் ரகங்களை உருவாக்க ஃபோக்ஸ்வாகன் திட்டம்!

Friday, June 17th, 2016

டீசல் மாசு ஊழல் சர்ச்சையிலிருந்து மீளப் போராடிக்கொண்டிருக்கும், ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மேலும் பல டஜன் கணக்கான மின்சார கார் ரகங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் முதன்மை நிர்வாகி மதியாஸ் முல்லர், 2025 ஆம் ஆண்டிற்குள் முப்பதுக்கும் மேலான மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், ஒரு வருடத்திற்கு மூன்று மில்லியன் பெட்ரோல்-மின்சாரக் கலப்பு வாகனங்களை விற்கவேண்டும் என்று இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் பிற பகுதிகளில் சேமிப்பை மேற்கொண்டு இதற்கு தேவையான முதலீட்டிற்கு நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாசு வெளிப்பாடு சோதனையில் ஏமாற்றுவதற்காக, சில டீசல் கார் மற்றும் வேன்களில் மென்பொருளை பொருத்தியதாக கடந்த வருடம் இந்த ஜெர்மானிய பெருநிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த சர்ச்சையை அடுத்து இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இந்நிறுவனத்தின் லாபம் 20% வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: