பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? திரும்பபெற வழிகள்!

Saturday, October 8th, 2016

பலவகையான சமூக வலைதளங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் மிக அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் விளங்குகிறது.

நம் பேஸ்புக் கணக்கு சில சமயம் ஹேக் (Hack) செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி நடந்தால் எப்படி நம் கணக்கை மீட்பது என்று சில எளிய வழிகளை பார்ப்போம்

நம் அக்கவுண்டை மீட்க முதல் விடயமாக கடவுச்சொல்லை (Password) மாற்ற வேண்டும். Home -) Account Settings -) General -) Password ஆப்ஷனை கிளிக் செய்து பழைய கடவுச்சொல்லை உறுதி செய்து பின்னர் புதிய கடவுச்சொல்லை சமர்ப்பிக்கவும்.

கடவுச்சொல்லை (Password) மாற்றி பின்பும் பேஸ்புக் கணக்கில் நுழைய முடியவில்லை என்றால் ,கடவுச்சொல்லின் ஹோம் பக்கத்துக்கு சென்று அதை ரீ-செட் செய்யவும். ரீசெட் செய்தால் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்ல் முகவரிக்கு ஒரு இணைப்பு வரும். அதை கிளிக் செய்து புதிய கடவுச்சொல்லை பதிவு செய்வதுடன் நம் கணக்கையும் மீட்கலாம்.

Home -) Account Settings -) Apps க்குள் சென்று சந்தேகத்துக்குரிய சில ஆப் பயன்பாடுகளை நீக்கி விடலாம்.ஹேக் தாக்குதலில் இருந்து காப்பாற்றி கொள்ள எப்போதும் இறுக்கமான பிரைவஸி செட்டிங்ஸ் மற்றும் வழக்கமான அடிப்படையில் கடவுச்சொல்லை (Password) புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

1d41888e37467ad93c18e9d014e011d0

Related posts: