இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மிதமிஞ்சிய உடல் பருமனை மட்டுப்படுத்த நடவடிக்கை!

Thursday, June 8th, 2017

பாடசாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் மாணவர்களை அதிகம் ஈடுபடுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சின் சிபார்சின் அடிப்படையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதுமான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையினால் இளைஞர்களுக்கு மத்தியில் மிதமிஞ்சிய உடற் பருமன் காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது இலங்கையில் முகங்கொடுக்கப்படுகின்ற பிரதான சுகாதார பிரச்சினையாக இருதய நோய், அதிக குருதி வெளியேற்றம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 59% ஆனவை தொற்றா நோய்களினால் ஏற்படுகின்றது என இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்கு இறையாகும் நபர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு குறைவான நபர்களே என்பது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: