அன்ரோயிட் சாதனங்களில் iMessage அப்பிளிக்கேஷன்!

Monday, June 13th, 2016

என்னதான் ஒரே வகையான வியாபாரத்தில் இரு துருவங்களாக இருக்கும் நிறுவனங்கள் சில சமயத்தில் இணைந்து செயற்படவேண்டிய தேவைகள் வந்தே தீரும்.

அவ்வாறே அப்பிள் நிறுவனமும் அண்மைக்காலமாக கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் இயங்கும் மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

அண்மையில் அப்பிள் மியூசிக் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அப்பிள் சாதனங்களுக்கே உரித்தான அப்பிளிக்கேஷன்களை அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாகவே ஐமேசேஜ் (iMessage) சேவையினை தரக்கூடிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள WWDC நிகழ்வில் அப்பிள் நிறுவனத்தினால் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: