பெருவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவளைகள் உயிரிழப்பு!
Tuesday, October 18th, 2016
பெரு நாட்டில் தெற்குப் பிரதேசத்தில் உள்ள கோட்டா நதிக்கு அருகாமையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவளைகள் உயிரிழந்துள்ளன.
இது தொடர்பில் அந்நாட்டு சுற்றாடல் முகவர் நிலையம் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றது.இந்த நதியின் நீர் முற்றாக மாசடைந்திருப்பதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் நதியில் கழிவுகளை சேர்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அருகிவரும் உயிரினமான டிட்டிகாக்க நீர் தவளைகள் Titicaca water frogs பெரு மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் பெரிய நன்னீர் ஏரி மற்றும் அதன் கிளைகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம்!
9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
உலக முடிவு பகுதியின் மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்!
|
|
|


