அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு!

Monday, April 3rd, 2017

அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை நாசா அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு பேரொளி ஏற்பட்டதாகவும் பூமியில் இருந்து 170 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அண்டவெளிப் பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பெரு வெடிப்பிற்கு அறிவியல் ரீதியில் மூன்று வாய்ப்புகள் காரணமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இரண்டு வாய்ப்புகள், காமா கதிர்களின் வெடிப்பை சுட்டிக்காட்டுகின்றன. ஒரு பெரிய நட்சத்திரத்தின் சிதைவு அல்லது ஒரு நியூட்ரான் நட்சத்திரத்துடன் மற்றொரு நியூட்ரான் நட்சத்திரம் இணைவது போன்ற காரணங்களால் காமா கதிர்களின் வெடிப்பு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

Related posts: