தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம்!

Tuesday, June 13th, 2017

உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான சிகிச்சையை கண்டறிந்துள்ளனர்.

அதாவது தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் மரணத்தில் இருந்து புற்று நோயாளிகள் தப்பிக்க முடியும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வு அமெரிக்க புற்றுநோய் சங்கம் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது அதன்படி 992 குடல் புற்று நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் தினமும் 25 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களின் மரணம் 42 சதவீதம் குறைந்து இருந்தது.எனவே தினமும் 25 நிமிடம் நடை பயிற்சி மேற்கொண்டால் புற்று நோயாளிகள் சாவில் இருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: