பகிடி வதைதொடர்பில் கைதான 15 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Friday, March 3rd, 2017

பேராதனைப் பல்கலைக்கழக, விவசாய பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் 15 பேர், அந்தப் பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவர்கள் எட்டுபேரை, வீடொன்றுக்குள் அடைத்துவைத்து, மனிதாபிமானமற்ற முறையில் பகடி வதைக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பேராதனை, களுகமுவ மேகொட பகுதியில் உள்ள, வீடொன்றில் வைத்தே, 19ஆம் திகதி இரவு 11:30 மணிக்கு, இந்த எட்டுப்பேரும் மனிதாபிமானமற்ற முறையில் பகடி வதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். மிகவும் வித்தியாசமான சத்தங்களும், முனங்கள்களும் கேட்பதையிட்டு சந்தேகம் கொண்ட, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அவைதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 15 பேரும், கண்டி நீதவான் ரஞ்சனி கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களை இன்று நீதிமன்றில் ஆஜரப்படுத்தியபோது, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

colvgg155109200_5226080_15022017_MFM_CMY

Related posts: