இலங்கையின் பொருளாதார மீட்சி சவாலாகவே உள்ளது – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023

இலங்கையின் பொருளாதாரத்தில் தற்காலிக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்ற போதிலும், பொருளாதார மீட்சி என்பது தொடர்ந்தும் சவாலாகவே உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்காமுரா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னர், வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மூலம், பொருளாதார ரீதியாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து நன்கு அறிந்து கொண்டதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த அது உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார சீர்திருத்தம், ஸ்திரத்தன்மை, கடன் நிலைத்தன்மையினை மீட்டெடுப்பது, ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், நிர்வாக திறனை வலுப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கடன் வழங்குநர்களுடன் தொடர்ச்சியான வெளிப்படையான கருத்து பரிமாற்றம், திட்ட இலக்குகளுக்கு ஏற்ப கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்ட எதவும்.

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பது குறித்த செயல்பாடு மிகவும் அவசியமானது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்காமுரா குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: