பிரித்தானியா விலகிச்செல்லும் : முற்கூட்டியே கணித்த அபூர்வ சோதிடர்!
Tuesday, June 28th, 2016
அபூர்வ ஜோதிடர் என அழைக்கப்படும் நாஸ்டர்டாமஸ் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.உலகில் நடக்க இருப்பவை குறித்து அவர் கணித்துக் கூறியது ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது திகைப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில்,
பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா என்பவரை அந்நாட்டு மக்கள் நாஸ்டர்டாமஸ் அழைத்து வருகின்றனர். காரணம், இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை நடந்து உள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகி செல்லும் என முன்கூட்டியே கணித்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன்படியே, சமீபத்தில் நடந்த பொதுவாக்கெடுப்பின் படி பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிசெல்ல வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இவரது கணிப்புகளை நம்பும் மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறவுகளின் முறிவால், இது போரைத் தூண்டுமோ என அச்சம் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், அந்த போரின் போது இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்கள் மீது இராசயன தாக்குதலை மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


