தெரியாத அழைப்பா ; கண்டறிய வருகின்றது அப்ளிகேஷன்!

Saturday, August 18th, 2018

தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் வண்ணம் கூகுள் புதிய அப்ளிக்கேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக போன்ஆப் பீட்டா பதிப்பில் SPAM அழைப்புகளை கண்டறியும் அம்சத்தை சோதனை செய்த கூகுள், தற்போது SPAM கால்களை பில்டர் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது.

இதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்துவிடலாம், இந்த ஆப் தேவையற்ற அழைப்புகளை நேரடியாக வாய்ஸ் மெயிலிற்கு அனுப்பி விடுகிறது.

இந்த சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

செட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற்றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும்.

இது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில், ‘போன்’ ஆப்பின் முகப்பு பக்கம் சிவப்பு நிறத்தில் மாறுகிறது.

இருப்பினும் முழுமையாக செயல்பாட்டிற்கு வராததால், இதன் செயல்பாடு மற்றும் திறன் குறித்து தெரியவில்லை.

Related posts: