பூமிக்கு அருகில் வருகைதரும் சனி மற்றும் வியாழன் கோள்கள் – இலங்கை வான்பரப்பில் கண்களுக்கு புலப்படும் என ஆர்தர் சி கிளாக் மையம் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020

சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் இரண்டும் புவிக்கு மிகவும் அருகில் நெருங்கவுள்ள காட்சி இன்றைய தினம் வானில் நிகழவுள்ளது.

400 மில்லியன் மைல்களுக்கு இடையிலான இடைவெளி இந்த இரண்டு கோள்களுக்கும் இடையில் காணப்படும் என ஆர்தர் சி கிளாக் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் பல நூற்றாண்டுகளாக இருப்பதை விடவும் இன்று இரவு வானில் இந்த கிரகங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தோன்றும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று மாலை 5.30 அளவில் இந்தக் காட்சியைக் காண முடியும் என ஆர்தர் சி கிளாக் மையம் தெரிவித்துள்ளது.

சூரியனை சுற்றிவருவதற்கு வியாழனுக்கு 12 ஆண்டுகளுக்கும் குறைவான காலமும் சனிக்கு 29 ஆண்டுகளுக்கு அதிக காலமும் எடுக்கின்றது.

இந்த நிலையில் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த கிரகங்கள் பூமிக்கு நேர்க்கோட்டில் தோன்றுவதால் இது ஒரு சிறந்த இணைவு என வானியலாளர்கள் அழைக்கின்றனர். இந்த இறுதியான பாரிய இணைப்பு கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்தது.

இருப்பினும் 1623 ஆம் ஆண்டு குறித்த இரண்டு கோள்களும் ஒன்றுக்கொன்று அரிதாக மிகவும் நெருங்கி காட்சியளித்துள்ளதாக சர்வதேச வின்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்றதொரு நிகழ்வானது எதிர்வரும் 2080 ஆம் ஆண்டு மீண்டும் நிகழாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: