பழைமையான மனித மூதாதை கண்டுபிடிப்பு!

Thursday, February 2nd, 2017

மிக ஆரம்ப மனித முதாதை என்று நம்பப்படும் நுண்ணிய உயிரினம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினத்தின் படிமங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் நேர்த்தியாக இருப்பதாக அதனை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நுண்ணிய கடல் உயிரினமான இது பரிணாம பாதையில் மீன்கள் தொடக்கம் மனிதன் வரை வளர்ச்சி பெறுவதற்கான ஆரம்ப படியாக உள்ளது. மத்திய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமங்கள் தொடர்பான விபரம் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

சக்கோர்ஹைடுஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நுண்ணுயிர் முதுகெலும்பு விலங்குகள் உட்பட பரந்த அளவிலான விலங்கினங்களின் தோற்றத்தின் ஆரம்ப உதாரணம் என்று ஆய்வுக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சக்கோர்ஹைடுஸ் மில்லிமீற்றர் அளவு கொண்டது என்பதோடு அவை கடல் படுக்கையில் வாழ்ந்து வந்துள்ளன. எனினும் இவை மிகப்பெரிய வாய் கொண்டிருப்பது ஏனைய உயிரினங்களை விழுங்க உதவும் என்று நம்பப்படுகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் உட்பட சீனா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிபுணர்களே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

coltkn-02-01-fr-01153349715_5178132_31012017_MSS_CMY

Related posts: