பழமை வாய்ந்த மனிதப் பல் கண்டுபிடிப்பு!

Monday, October 23rd, 2017

மனித தோன்றல்கள் தொடர்பில் இன்னும் விளக்க முடியாத மர்மங்கள் காணப்படவே செய்கின்றன.இவ்வாறிருக்கையில் ஆராய்ச்சிகளின்போது இந்த மர்மங்களுக்கு விடைகூறும் வகையில் அவ்வப்போது புதிய படிமங்கள் சிக்கி வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது மனித பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இப் பற்கள் சுமார் 9.7 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றினை மேலும் ஆராய்ச்சி செய்யும்போது மனித வரலாறு தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதேவேளை இதற்கு முன்னர் எதியோப்பியாவில் இவ்வாறான மனித மூதாதையரின் பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவை 3.2 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்ததாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: