மகத்தான கண்டுபிடிப்பு!

Monday, September 25th, 2017

அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களின் போது பயன்படுத்துவதற்காக இயந்திரமொன்றை, இலங்கையை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

இயற்கை அனர்த்தங்களின் போது பயன்படுத்தக் கூடிய வகையில் விசேட பெட்டரி பை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொறியியலாளர் பசிந்து பல்லாவெல என்பவரினால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் பிரித்தானியாவிலுள்ள Power Migration Partners Ltd நிறுவனத்தின் இயக்குனராவார்.

கடந்த காலங்களில் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு இலங்கை முகங்கொடுத்துள்ளது. இதன்போது வெள்ள நிலைமையினால் அதிகளவான இலங்கை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டில் வெள்ளம் ஏற்படும் போது பாதுகாப்பு நடவடிக்கையினை கருத்திற் கொண்டு மின்சாரம் தடை செய்யப்படும். இதன்போது மக்களின் தேவைக்கமைய மின்சாரப் பொருட்கள் பயன்படுத்துவதில் நெருக்கடியான நிலை ஏற்படும்.இதனை கருத்திற் கொண்டு விசேட பெட்டரி பை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசோதனை செய்து பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த இயந்திரங்களை இலங்கை சமூக சேவை அமைப்பிடம் கையளிக்கும் நிகழ்வு வத்தளையில் இடம்பெறுகின்றது.இதன் ஊடாக தொலைபேசி சார்ஜ் செய்து கொள்வதற்கும், குளிர்சாதன பெட்டிக்கு மின்சாரம் வழங்கவும், அனைத்து மின்சார பொருட்களை சார்ஜ் செய்து கொள்வதற்கும் முடியும்.இந்த பெட்டரி பையின் காப்புரிமையை பெற்றுள்ள பசிந்து, இதனை புதுப்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்கு களனி மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்கள் உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.தோளில் சுமந்து கொண்டு எந்தத் தூரத்திற்கும் கொண்டு செல்லக் கூடிய வகையில் மிகவும் இலகுவாக முறையிலும், நீரிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த கூடிய வகையில் இந்த பெட்டரி பை தயாரிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ மெகா வோட் சக்தியை சேமித்துள்ள இந்த பெட்டரிக்குள் இருந்து 230 வோட் திறன் வெளியிடப்படும். அதற்கமைய சாதாரண வீட்டினுள் மின்சாரம் பயன்படுத்த கூடிய முறைக்கு இந்த பெட்டரியை ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் இதனை மீண்டும் சார்ஜ் செய்யும் போது, சூரிய சக்தி, ஜெனரேட்டர் அல்லது சாதாரண மின்சக்தியில் இலகுவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.இதனை பயன்படுத்தும் போது, சத்தம் அல்லது புகை வெளியேறாதென தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதனை 10 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: