பல ஆண்டுகளுக்கு பின் பதிலளித்த விஞ்ஞானிகள்!

Saturday, May 7th, 2016

பூமியின் எல்லா பகுதிகளுக்கும் ஒரேயளவில் மழை வீழ்ச்சி கிடைப்பதில்லை.

சில இடங்களில் உலர் நிலங்களை விட 10,000 மடங்கான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுமுண்டு.

சரி அது என்னதான் கேள்வி?

உலகின் வெவ்வேறு பகுதிகளில் மழையின் போக்கு ஒரேமாதிரி அமைகிறதா இல்லை இடத்திற்கிடம் மழைவீழ்ச்சி விதிகள் வேறுபடுகிறதா?

ஜரோப்பிய விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அதாவது மழைவீழ்ச்சின் போக்குடன், கிடைக்கப்பேறும் மழையின் அளவு தொடர்பான ஆராய்ச்சி.

பப்புவா, நியுயூகினியா போன்ற இடங்களில் வார இடைவெளிகளில் சிறு மழைவீழ்ச்சியும், மாத இடைவெளியில் பெரு மழையும் கிடைக்கப்பெறுவதை அவதானித்தனர்.

அதேபோல் நைஜர் பகுதியில் இருவார கால இடைவெளியில் சிறு மழையும், இரு மாத இடைவெளியில் பெருமழையும் கிடைக்கப்பெறுவதையும் அவதானித்தனர்.

இதிலிருந்து இரு இடங்களிலும் மழைவீழ்ச்சியின் ஒரே தன்மையை, அதாவது சிறு மழைவீழ்ச்சிக் கிடைப்பட்ட காலத்தின் நான்கு மடங்காக பெரு மழைவீழ்ச்சிகளுக் கிடைப்பட்ட காலம் இருப்பதை அவதானித்தனர்.

இதன்படி பப்புவா, நியுயூகினியா போன்ற இடங்களின் மழைவீழ்ச்சிக் கிடைப்பட்ட காலப்பகுதியை இரண்டால் பெருக்குவதன் மூலம் நைஜரில் மழைவீம்ச்சியை எதிர்வு கூற முடியுமெனவும், அதேபோல் மற்றைய இடங்களில் மழைவீழ்ச்சியின் போக்கிற்கும் இதுபோன்ற தொடர்பு உள்ளதெனவும் தெரிவிக்கின்றனர்.

Related posts: