நிலவின் சுற்றுவட்டப் பாதையை தொட்டது சீனாவின் கியூகியோ !

Monday, May 28th, 2018

நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சீனாவின் கியூ கியோ செயற்கைக்கோள், சுற்றுவட்டப்பாதையைத் தொட்டது, என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கியூகியோ, 400 கிலோகிராம் எடைகொண்ட செயற்கைக்கோள் மூன்றாண்டுகள் செயல்படும்விதமாக வடிவமைக்கப்பட்டது. கடந்த வாரம் சீனாவின் விண்வெளி செயற்கைக்கோள் தளத்திலிருந்து ஏவப்பட்டது.

பூமியிலிருந்து 4,55,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் சுற்றுப்பாதைக்குள்தான் செயற்கைக்கோள் நுழைந்துள்ளது. பீஜீங்கிலுள்ள புவி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வழங்கப்படும் ஒவ்வொரு அறிவுறுத்தலுக்கும் இணங்கி இச்செயற்கைக்கோள் செயல்பட்டு வருகிறது.நிலவின் மேற்பரப்புக்கு 100 கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டு, தற்போது பூமி-நிலவின் (எல்2) இரண்டாவது லாக்ராங்கியனைச் சுற்றியுள்ள நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ளதாக சீனா தேசிய விண்வெளி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

கியூகியோ குறைந்த அளவே எரிபொருளைக் கொண்டுள்ளது. எனினும் நிலவு ஈர்ப்பு காந்தவிசையினால் எரிபொருள் செலவு பெரிய அளவில் வீணாகப் போவதில்லை. எனினும் செயற்கைக்கோளில் இருப்பு உள்ள குறைந்தபட்ச எரிபொருளோடுதான் அது நிலவின் இருண்ட பக்கத்துக்குச் சென்றாக வேண்டும்பூமியைச் சுற்றி 4,55,000 கி.மீ. துாரத்தில் எல்2 புள்ளியைச் சுற்றியுள்ள ஒரு ஒளிவட்டச் சுற்றுப்பாதையை அடைவதற்கு முன்னர் இந்த செயற்கைக்கோள் பல தடவைகள் சுற்றுப்பாதையைச் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த சுற்றுப்பாதையில் செயல்படும் உலகின் முதல் தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள் இதுவாகும்

Related posts: