மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றி புதிய சாதனை!

Sunday, July 17th, 2016
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் குறுகிய நாட்களில் உலகை சுற்றி வந்து முந்திய சாதனைகளை முறியடித்துள்ளார்.
சூரிச் நகரை சேர்ந்த Grisu Grizzly என்பவர் தான் இந்த அபார சாதனையை படைத்துள்ளார். குறுகிய நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றி வர வேண்டும் என திட்டமிட்ட அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
முதன் முதற்கட்டமாக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Daytona என்ற நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்த அவர் தென் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளை அடைந்தார்.
பின்னர், பின்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்ட அவர் ரஷ்யா, சிங்கப்பூர், அலாஸ்கா, கனடா நாடுகளுக்கு சென்று இறுதியாக அமெரிக்கா நாட்டில் கடந்த யூலை 10ம் திகதி தனது பயணத்தை நிறைவு செய்தார்.
இவ்வாறு 119 நாட்கள் மற்றும் 21 மணி நேரத்தில் இவர் உலகை சுற்றி வந்துள்ளார். இதன் மூலம், பிரித்தானிய நாட்டை சேர்ந்த Nick Sanders என்பவர் செய்த முந்தைய சாதனையை (120 நாட்கள், 2 மணி நேரம்) முறியடித்துள்ளார்.
இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளிற்கு ‘ஜேம்ஸ் பாண்டு’ என செல்லமாக பெயரிட்டுள்ளார்.
ஹொலிவுட் நடிகரான ஜேம்ஸ் பாண்டு பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளில் உள்ள வசதிகள் போல் இவரது மோட்டார் சைக்கிளிலும் அமைத்ததால் இப்பெயர் வைத்துள்ளதாக Grisu Grizzly உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

Related posts: