சீனாவின் ஆளில்லா சரக்கு விண்கலம்!

Saturday, April 22nd, 2017

சீனாவின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஆளில்லா சரக்கு விண்கலம் லாங் மார்ச் – 7 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது விண்ணில் பறந்து கொண்டிருக்கும் டியாங்கோங்-2 விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சென்றடைந்து, எடுத்துச்சென்ற சரக்குப் பொருட்களை அங்கு இறக்கவுள்ளது இந்த விண்கலம்.விண்வெளி ஆய்வு நிலையத்திற்குத் தேவையான எரிபொருள், ஆய்வு சாதனங்கள் போன்றவற்றை இந்த விண்கலம் ஏற்றிச் சென்றுள்ளது.

தற்போது விண்ணில் பறந்து கொண்டிருக்கும் டியாங்கோங்-2 ஆய்வு நிலையம் சோதனைக்காக செலுத்தப்பட்டதுடன், அதன் ஆயுட்காலம் வெறும் 5 வருடங்கள் தான் என சீனா அறிவித்துள்ளது.எவ்வாறாயினும், புதிய விண்வெளி ஆய்வு நிலையத்தை, 10 வருட ஆயுட்காலத்துடன் நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது.

அந்த திட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், முதன்முதலாக ஆளில்லா சரக்கு விண்கலத்தை சீனா செலுத்தியுள்ளது.

Related posts: