இலங்கையில் அபூர்வ கிணறு!

Thursday, November 2nd, 2017

பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கேகாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குடிநீரில் உப்புத்தன்மையை நீக்கி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான தொழில்நுட்பம் இந்த கிணற்றில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சுமார் 5 அடி கொண்ட இந்த கிணற்றின் மீது பெரிய அளவிலான கருங்கல் வைத்து குப்பை சேராத வகையில் ஒரு அடி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாரியளவிலான மண் சட்டிகள் சில கிணற்றுக்குள் இறக்கி அதில் நீரின் தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.நவகமுவவில் உள்ள ஆதிகாலத்து தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக இந்த கிணறு பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts: