ஆப்பிளுக்கு அபராதம் விதித்தது ஏன்?

Monday, September 5th, 2016

உலக புகழ்பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவிற்கு எதிரானது அல்ல என்று ஐரோப்பிய யூனியன் விளக்கமளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், சட்ட விரோதமாக பல வரிச்சலுகைகளை அந்த நாட்டு அரசிடம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. அங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச்சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இது ஐரோப்பிய யூனியன் சில விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அளித்த சலுகை முறைகேடானது என்று தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் மட்டுமே முந்தைய ஆண்டுகளுக்கான வரியாக 1,300 கோடி யூரோ (சுமார் ரூ. 96,500 கோடி) தொகையை வரி உள்ளிட்ட அபராதமாக அயர்லாந்துக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு உத்தரவிட்டது.

இதனை அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதக் கூடாது. அயர்லாந்தின் தவறான தொழிலக கொள்கையால் ஐரோப்பிய யூனியனுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனை சீர் செய்யவுள்ளோம்.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஐரோப்பா அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்று ஜான் கிளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: