5-ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம்!

Wednesday, May 24th, 2017

உலகில் 4-ஜி தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5-ஜி தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சிகளில் அப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது.

அதிவேக வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க தீர்மானித்துள்ள அப்பிள் நிறுவனம் மில்லிமீற்றர் அலைக்கற்றை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் சோதனை செய்வதற்கு அனுமதி கோரியுள்ளது.மேலும், குறித்த புதிய தொழில்நுட்பம் நெட்வேர்க் பான்ட்வித் (Network bandwidth) மற்றும் வேகத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம் பதிவு செய்துள்ள விண்ணப்பத்தில் சோதனைகள் சார்ந்த அதிகளவிலான தகவல்கள் இடம்பெறவில்லை எனினும், இந்த சோதனைகளின் மூலம் எதிர்கால 5-ஜி நெட்வேர்க்களில் சாதனங்கள் எவ்வாறு வேலை செய்யும் என்பது சார்ந்த தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சார்ந்த சோதனைகளை சிலிகான் வேலியின் மில்பிடாஸ் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமையகம் என இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்துவதற்கு அப்பிள் திட்டமிட்டுள்ளது.

எதிர்கால 5-ஜி நெட்வேர்க்களுக்கு பயன்படும் வகையில், ஐபோன்களை தயார் செய்வது மட்டுமன்றி பல்வேறு இதர சோதனைகளையும் அப்பிள் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

Related posts: