பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் ஷு!

சம காலத்தில் ஆடைகள் கூட ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் வரிசையில் காலணிகளும் இடம்பிடித்துள்ளன.
உலகின் முன்னணி காலணி வடிவமைப்பு நிறுவனமான Digitsole தான் குறித்த காலணியை வடிவமைப்பு செய்துள்ளது. இக் காலணியானது தானாகவே நூல் இறுக்கமடையக்கூடியதாகவும், வேகம் மற்றும் காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யக்கூடியதாகவும் இருப்பதுடன் தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டினை வழங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
தற்போது Kickstarter தளத்தில் இக் காலணி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. காலணியை வடிவமைத்த குழுவிற்கு வழங்கவேண்டிய 50,000 டொலர்களை குறித்த தளத்தின் ஊடாக திரட்டிய பின்னர் விற்பனைக்கு வரவுள்ளது. இன்னும் 35 நாட்களில் நிதி திரட்டும் நடவடிக்கை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
புத்தம் புதிய கைப்பேசி!
130 வருடங்களுக்கு பிறகு திருப்பி கொடுக்கப்பட்ட புத்தகம்!
MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு
|
|