இலங்கைக்கு வந்த அரிய வகை பறவை இனம்!

Wednesday, November 16th, 2016

வெளிநாடு ஒன்றிலிருந்து அரிய வகை பறவையொன்று இலங்கை வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவை கொழும்பு, திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் கீழே விழுந்து கிடந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த பறவையை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளதாக பேராசரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது நல்ல உடல் நிலையில் பறவை உள்ளதாகவும், நுகேகொடையில் உள்ள ஈர நிலத்தில் இந்த பறவை விடுவிக்கப்படவுள்ளது.

இந்த சுற்றுலா பறவை தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Malayan night heron என இந்த பறவை இனம் அழைக்கப்படுகின்றது. குறித்த பறவை இனத்திற்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் சாதகமான சூழல் காணப்படுவதால் இலங்கை வருதாக தெரிவிக்கப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: