அண்டவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த விண் கலத்தை மீள பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை!

Monday, December 12th, 2022

சந்திரனை சூழவுள்ள அண்டவெளியில் கடந்த மூன்று வார காலமாக சஞ்சரித்துக் கொண்டிருந்த விண் கலத்தை மீள பூமிக்கு கொண்டு வரும் துரித நடவடிக்கைகளில் ‘நாசா’ ஈடுபட்டுள்ளது.

கலிபோர்னியாவிற்கு அப்பால் உள்ள பசுபிக் சமுத்திரத்தில் இந்த ஓடத்தை இறக்க ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆள் இல்லாமல் பயணித்த இந்த விண்வெளி ஓடத்தின் மூலம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய அடுத்த பயணத்தின் போது விண்வெளி வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவர் என ‘நாசா’ தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தசாப்த காலத்தினுள் பயணிகளை அண்டவெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோடி செயல்பாடாக இந்த திட்டம் அமைவதாக ‘நாசா’ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, சரியாக 50 வருடங்களுக்கு முன்னர் அப்பலோ 17 விண் கலத்தின் ஊடாக பயணித்த நீல் ஆம்ஸ்ரோங்கின் தலைமையில் சென்ற மூன்று பேரை கொண்ட விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக தமது பயணத்தை நிறைவு செய்தனர்.

50 வருடங்களுக்கு முன்னர் இன்றையதினம் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் தமது காலடியினை பதித்தார்.

அந்த பயணத்தின் போது, அந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோன் விற்ஜரால்ட் கெனடியின் கையொப்பத்துடனான அமெரிக்க தேசிய கொடியும் நிலவில் நாட்டப்;பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: