விண்வெளியில் தெரியும் பிரம்மாண்ட பொருள் !

Thursday, March 16th, 2017

விண்வெளியில் உள்ள CFBDSIR 2149-0403 என்னும் பொருள் புதிய கிரகமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி சம்மந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் CFBDSIR 2149-0403 என்னும் பொருள் விண்வெளியில் தெரிவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த பொருள் இன்னொரு கிரகம் என சிலர் கூறிவரும் நிலையில், அதற்கான சரியான ஆதாரம் இல்லை என சிலர் கூறி வருகிறார்கள். மேலும், அது கிரகம் இல்லை brown dwarf எனப்படும் விண்வெளி நட்சத்திரத்தின் இடையில் அகச்சிவப்பு கதிர்களை உமிழும் அசுரக்கோள் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர் Philippe Delorme கூறுகையில்,  நாங்கள் எதிர்ப்பார்த்தை விட இந்த பொருள் விசித்திரமாக உள்ளது. எங்களாலேயே இது இன்னொரு கிரகமா இல்லையா என இன்னும் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. கிரகம் மற்றும் brown dwarf இரண்டின் கலவையாக கூட இது இருக்கலாம், இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி செய்து வருகிறோம் என கூறியுள்ளார்

Related posts: