தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா!
Wednesday, April 11th, 2018
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’ கருவியை அனுப்பியது. அந்தக் கருவி தனது ஆராய்ச்சி முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
ஆனால், ரோவர் மிகவும் மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்கிறது. அதன் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் தகவல்கள் மிகவும் தாமதமாகிறது.மேலும், ’ரோவர்’ அதிக எரிபொருட்களை எடுத்துக் கொள்வதாலும், அது பூமிக்கு அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இல்லை என்பதாலும் ‘ரோவர்’-யை கைவிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.ரோவர்’-க்கு பதிலாக ரோபோ தேனீக்களை விண்வெளிக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு ‘Mars Piece’ என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 செண்டிமீட்டர் வரை என்ற அளவில் மிகச் சிறியதாக இருக்கும்.மேலும், இந்த ரோபோ தேனீயில் சிறிய கமிரா, சிறிய sensor என நிறைய வசதிகள் உள்ளன. இந்த தேனீக்களுக்கு குறைந்த நேரம் தான் Charge இருக்கும். அதனால், இந்த தேனீக்களுடன் ரோவர் ஒன்றும் அனுப்பப்பட உள்ளது.இந்த ரோவர் மூலமாக அனைத்து ரோபோக்களுக்கும் Charge செய்ய முடியும். எரிபொருள் செலவு மிக குறைவு என்பதால், 20க்கும் மேற்பட்ட தேனீக்கள் இன்னும் 2 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பட உள்ளன.இந்த தேனீக்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


