செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்ய நாசா புதிய திட்டம்!

Thursday, June 15th, 2017

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் புதிய திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர்.

இதற்காக, அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 4 பேர் கொண்ட குழுவினை அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. பத்து நாட்கள் கடலின் ஆழத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலின் ஆழத்தில் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்றே புவியீர்ப்பு விசை மிகக்குறைவாக இருக்கும்.

அதனால், புவியீர்ப்பு விசையற்ற பகுதிகளில் மனிதன் உயிர்வாழ்வது குறித்து இந்த ஆய்வு முடிவு பல்வேறு பயனுள்ள தகவல்களை அளிக்கும் என்று நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விண்வெளியில் மேற்கொள்வது போலவே நடைபயணம், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளையும் இந்த ஆய்வில் பின்பற்ற இருப்பதாக நசா தெரிவித்துள்ளது

Related posts: