நிறம் மாறுகின்றதா சனி!

Thursday, October 27th, 2016

சனி கிரகத்தின் வடதுருவத்தில் உள்ள அறுகோண அமைப்பின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் மர்மம் குறித்து வானியலாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

நாசாவின் கசினி விண்கலம் இந்த பிராந்தியத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு எடுத்த படத்தில் அது நீல நிறத்தில் தோன்றியது. எனினும் 2016 ஆம் ஆண்டு கசினி சனியின் வட துருவத்தை கடந்து சென்றபோது அதன் நிறம் மாறி தங்க நிறத்தில் தோன்றுகிறது.

இந்த நூதனமான நிகழ்வு குறித்து ஆய்வு செய்யப்படுவதாக நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த நிறமாற்றம் சனியின் பருவகால மாற்றத்துடன் தொடர்புபட்டதாக இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சனியில் ஓர் ஆண்டு என்பது பூமியில் 29 ஆண்டுகளுக்கு சமனாகும்.

“2017 மே மாதத்தில் கோடைகாலம் உச்சத்தை எட்டுவதை ஒட்டி வட துருவத்தில் ஒளி இரசாயன மூட்டம் அதிகரித்திருப்பது குறிப்பாக நீல நிறம் அதிக தங்க நிறமாக மாறுவதற்கு காரணமாக இருக்கலாம்” என்று நாசா வெளியிட்டிருக்கும் அறிவிப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு ஏவப்பட்டு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஆய்வுகளை ஆரம்பித்த கசினி விண்கலம் சூரியனில் இருந்து ஏழாவது கிரகத்தையும் அதன் நிலவுகளையும் அவதானித்து வருகிறது.

coltkn-10-27-fr-01152044152_4894448_26102016_mss_cmy

Related posts: