சிரித்தால் மட்டும் முகம் காட்டும் கண்ணாடி!

Sunday, October 29th, 2017

துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

டேப்லட்(Tablet) வடிவில் உள்ள இந்தக் கருவியில் கண்ணாடி மற்றும் கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இது முகம் பார்ப்பவரின் முக உணர்ச்சிகளை கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடியை பார்த்து சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகம் தெரியும், அதுவே சிரிக்கவில்லை எனில் கண்ணாடியில் முகம் தெரியாது.இந்த கண்ணாடியின் விலை ரூ.1.2 முதல் ரூ.1.94 லட்சம் வரை பல விதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெர்க் இல்ஹான் கூறியதாவது, என் குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வந்து விட்டது. அதனால் அவரின் மகிழ்ச்சி, சிரிப்பை இழந்து கண்ணாடி பார்ப்பதை கூட நிறுத்தி விட்டார்.அப்போது தான் அவர்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். அப்போது சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.அதன் பின் புற்றுநோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன்.இப்போது இந்தக் கண்ணாடி தயாரிக்க அதிகம் செலவாகிறது. ஆனால் இந்த கண்ணாடியின் தயாரிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது தான் என் லட்சியம் என்று கூறியுள்ளார்.

Related posts: