Huawei அறிமுகப்படுத்தியுள்ள புத்தம்புதிய phablet – MediaPad T2 7.0!

Saturday, January 28th, 2017
இலங்கையிலுள்ள ஒரு முன்னணி திறன்பேசி (ஸ்மார்ட்போன்) வர்த்தகநாமமான Huawei, இலங்கை மக்களுக்கு Huawei MediaPad T2 7.0 இனை அறிமுகம் செய்துவைத்துள்ளது. இப்புதிய சாதனமானது phablet சாதனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், திறன்பேசி மற்றும் tablet ஆகியவற்றின் கலப்பு சாதனமாக, tablet சாதனத்தின் வலு மற்றும் பாரிய முகத்திரையையும், திறன்பேசியின் வடிவமைப்பு மற்றும் அதன் பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. இந்த MediaPad மிகுந்த பெறுமதியைச் சேர்ப்பிக்கவுள்ளதுடன், குடும்பத்தில் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கக்கூடிய ஒரு புத்தாக்க தெரிவாகவும் காணப்படுகின்றது.

திறன்பேசி மற்றும் வயடிடநவ சாதனம் ஆகியவற்றின் இணைந்த நன்மைகளை பயனர்களுக்கு வழங்கும் வகையில், அவை இரண்டுமே ஒன்றாக இணைந்த, ஒரு நேர்த்தியான, கையடக்கமான மற்றும் வலுவான சாதனமான Huawei MediaPad T2 7.0 இனை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் 4G LTE இணைப்புத்திறன் காரணமாக அதிவிரைவான தொழிற்பாட்டு அனுபவத்தை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்புதிய சாதனத்தின் அறிமுகம் தொடர்பில் Huawei சாதனங்களின், இலங்கைக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ´எமது வாடிக்கையாளர்களின் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பெறுமதியைச் சேர்ப்பித்து, சௌகரியத்தை வழங்கும் உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை Huawei தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. குடும்பத்தில் எவருக்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கான மிகப் பொருத்தமான ஒரு தெரிவாக Huawei MediaPad மாற முடியும்,´ என்று குறிப்பிட்டார்.

இணையத்தை உலவும் (பிரவுசிங்) போதும், விளையாட்டு அம்சங்கள் அல்லது வெவ்வேறு பயன்பாடுகளுக்கிடையில் (applications) மாற்றிக்கொள்ளும் போதும் அவற்றை அதிவிரைவாக கட்டுப்படுத்துவதற்கு phablet சாதனத்தின் quad-core, 1.5GHz A7 processor உதவுகின்றது. இந்த திறன் சாதனம், வியக்கவைக்கும் 12 மணி நேர உயர்-வரையறை கொண்ட வீடியோ, 7 மணி நேர 4G இணைய உலாவல் (பிரவுசிங்) மற்றும் 23 மணி நேர அழைப்பு நேரம் ஆகியவற்றையும் வழங்ககின்றது. Android 6.0 4100 mAh கொள்திறன் கொண்ட நீடித்து உழைக்கும் மின்கலம், WSVGA உடன் 7-அங்குல IPS முழுமையான காட்சி கொண்ட முகத்திரை போன்ற ஏனைய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் அது கொண்டுள்ளது. இந்த Huawei MediaPad T2 7.0 சாதனமானது, ரூபா 18,900 என்ற சில்லறை விலையில் கிடைக்கப்பெறுவதுடன், இதனை நாடளாவியரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முகவர்கள், சிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Huawei அனுபவ மையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

பெறுமதியால் முன்னெடுக்கப்படுகின்ற மற்றும் புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் சேவைகளை Huawei தொடர்ந்தும் வழங்கிவருகின்றது. Brand Finance வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டில் உலகில் முதல் 100 இடங்களிலுள்ள மிகவும் பெறுமதிமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில் 47 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டுள்ளது. Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 72 ஆவது ஸ்தானத்திற்கு அண்மையில் திடீர் உயர்ச்சி கண்டுள்ள Huawei அதன் மூலமாக மற்றுமொரு தனித்துவத்தையும் சம்பாதித்துள்ளது. GfK அறிக்கைகளின் பிரகாரம், Huawei ஆனது, இலங்கையில் 30% சந்தைப்பங்குடன் இரண்டாவது இடத்திலுள்ள திறன்பேசி வர்த்தகநாமமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

567062239MediaPad2

Related posts: