வால் நட்சத்திரத்தின் மீது மோதி பயணத்தை முடித்த ரொஸெட்டோ!

Friday, September 30th, 2016

ரொஸெட்டோ செயற்கைக்கோள் வெகு தொலைதூர விண்வெளியில் மேற்கொண்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை இரு ஆண்டுகளாக அது ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த வால் நட்சத்திரம் மீது மோதி நிறைவு செய்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் இது தொடர்பான உறுதியான தகவல் கிடைத்தவுடன் அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளிடமிருந்து , கைதட்டல்களும், சிலரி்டமிருந்து கண்ணீரும் நிரம்பிய உணர்ச்சிமிக்க சூழல் நிலவியது.

ரொஸெட்டோ செயற்கைக்கோள் விரைவில் சூரியனிலிருந்து வெகுதூரம் விலகி பேட்டரிகளை மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறனை இழந்துவிடும் என்பதை நிறுவனம் முடிவு செய்தபின், வால் நட்சத்திரம் 67-பி மீது மோதும் வகையில் திருப்பிவிடப்பட்டது.

மோதல் ஏற்பட்டவுடன் செயற்கைக்கோளிடமிருந்து வரும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஆனால், அதன் இறுதி சமிக்ஞை சுமார் 700 மில்லியன் கி.மீ பயணப்பட்டு பூமியை வந்தடைய 40 நிமிடங்கள் ஆனது.இறுதிவரை ரோஸெட்டா செயற்கைக்கோள் அனைத்து தகவல்களையும் திரட்டி வந்தது.

தனது இறுதி இடத்தை அடையும் வரை புகைப்படங்கள் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றை ரொஸெட்டோ எடுத்து அனுப்பி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

_91459145_ac1f675e-2f52-4c73-8211-9bff3cd5661e

Related posts: