அடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சாம்சுங்!

Sunday, September 18th, 2016

அப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது.

அதாவது மின்கல வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த இலட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது.

இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும்.

இந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இப் புதிய கைப்பேசியானது 1080 Pixel கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவும், Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: