காகங்கள் பசுமையை பேணும் இயற்கை விரும்பிகள்!

மரத்தில் கூடுகட்டி வாழ்கின்ற காகங்கள் காலையில் இரை தேடப் புறப்படுவதுடன் மதிய வேளைகளில் அதே மரத்தை வந்தடைகின்றன. காகத்தின் எச்சங்கள் சிறந்த உரமாகப் பயன்படுவதுடன் தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கும் காரணமாக அமைகின்றன. இவைதவிர எச்சத்தின் மூலமாக மண்ணில் பதிகின்ற விதைகள் மழைக்காலங்களில் முளைக்கத் தொடங்குகின்றன.
குறிப்பாக விதைகளை எச்சத்தின் மூலமாக ஆங்காங்கே பரவி தாவரங்கள் உற்பத்தியாவதற்கான இயற்கை விதைத் தூவியாக காகங்கள் விளங்குகின்றன. அதேவேளை கனிகளிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட விதையின் முளைப்புத் திறனோடு ஒப்பிடுகையில் காகத்தின் எச்சத்திலிருந்து பெறப்பட்ட விதையின் முளைப் புத்திறனானது அதிகமாக இருப்பதான தகவல் ஆய்வுபூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாட்ஸ்ஆப்பில் வீடியோ கோல்!
பிரபல தேடல் தளம் விடைபெற்றது!
மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பேஸ்புக்!
|
|