விண்வெளி நிலையம் பூமியை தாக்கும் நாள்!

Thursday, March 29th, 2018

சீனாவின் விண்வெளி நிலையமானது மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கும் இடையே பூமியில் பதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் சோதனைமுறை முதல் விண்வெளி நிலையமாகும் Tiangong-1. இந்த நிலையமானது தகவல் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ள நிலையில் மார்ச் 16 ஆம் திகதியானது அதன் கடைசி கட்டத்தில் எட்டியுள்ளது.

தற்போது கட்டுப்பாட்டை இழந்துள்ள Tiangong-1 பூமியை நோக்கி சீரான வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் பூமியின் எந்த பகுதியில் அது தாக்கும் என அறுதியிட்டு இதுவரை கணிக்க முடியவில்லை எனவும் விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ரடாரின் பார்வை வட்டத்தில் தற்போது குறித்த விண்வெளி நிலையமானது எட்டியுள்ளது எனவும்,

இதனால் விஞ்ஞானிகளுக்கு போதிய தகவல்களை திரட்டவும், அறுதியிட்டு கணிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: