ஆபிரிக்க சாம்பல் கிளிகள் வர்த்தகத்திற்கு தடை!

Sunday, October 2nd, 2016
உலக வன உயிரின மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், ஆஃப்ரிக்க சாம்பல் கிளிகளின் சர்வதேச வர்த்தகத்தை தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஜோஹானிஸ்பெர்க்கில் நடைபெற்ற அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம்    (சுருக்கமாக சி.ஐ.டி.இ.எஸ் ) தொடர்பான  கருந்தரங்கத்தில்  இந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் பேச்சுக்களை அப்படியே பேசும் அதன் திறன் காரணமாக இந்த பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காக வாங்க மக்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்பறவைகள் வேட்டையாடப்படுவது மற்றும் காட்டு வாழ்விடங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக சமீப ஆண்டுகளில் இந்த பறவைகள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பறவைகளை பாதுகாப்பதில் இந்த முடிவு ஒரு மிகப்பெரிய முயற்சி என்று இதன் முடிவை புகழ்ந்துள்ளது பாதுகாப்பு குழுவான உலகளாவிய வனவிலங்கு நிதியம்.

_91491808_31881ef7-3b10-407b-91c2-14f4de0357d4

Related posts: