செல்பி எடுத்தால் ஆபத்து!

Tuesday, June 21st, 2016

செல்போனில் ‘செல்பி’ எடுப்பது தற்போது பிரபலமாகிவிட்டது, சிலர் ‘செல்பி’ எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர் அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அடிக்கடி ‘செல்பி’ எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும் அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்பி எடுக்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது அதில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும். அதே நேரத்தில் செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மெக்னடிக் கதிர்கள் மரபனுவை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தி வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts: