இவர்கள் ஏன் சிரிப்பதில்லை?

Monday, June 6th, 2016

சர்வதேச அளவில் சில நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வாய்விட்டு சிரிப்பதை விரும்பாமல் தவிர்ப்பதற்கு என்ன காரணம் என்பதற்கான உளவியல் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டு மக்களும் பல்வேறு கலாசாரங்களை பின்பற்றி வருவதால், பொது இடங்களில் அவர்களின் பழக்கவழக்கங்களும் முற்றிலும் மாறுப்பட்டதாகவே உள்ளன.

குறிப்பாக, பொது இடங்களில் அழுவது அல்லது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் வாய்விட்டு சிரிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் பல வித்தியாசங்கள் இருந்து வருகின்றன.

இதற்கு இவர்கள் பல காரணங்களையும் கூறுகின்றனர்.

உளவியல் ரீதியான இந்த பழக்கவழக்கத்தை போலந்து நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற Kuba Krys என்ற உளவியல் நிபுணர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களை கொண்ட 44 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், ‘வாய்விட்டு சிரித்தால் மற்றவர்கள் தம்மை அறிவு குறைவானவர்கள் என எண்ணிவிடுவார்கள்’ என்பதால் சில நாடுகளை சேர்ந்தவர்கள் வாய்விட்டு சிரிப்பதை தவிர்க்கின்றனர்.

ஆனால், இந்த உளவியல் கருத்தினை ’முட்டாள்த்தனம்’ என எதிர்த்து பொதுஇடங்களில் வாய்விட்டு சிரித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடுகளும் பல உள்ளன.

அதேபோல், சில நாடுகளை சேர்ந்தவர்கள் ‘வாய்விட்டு சிரிப்பவர்கள் நேர்மையாக நடந்துக்கொள்ள மாட்டார்கள்’ என எண்ணுகிறார்கள்.

சில நாடுகளை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்மறையாக செயல்படுகிறார்கள்.

இந்த நாடுகளை தரவரிசை அடிப்படையில் பார்ப்போம்.

வாய்விட்டு சிரிப்பவர்களுக்கு அறிவு குறைவு என எண்ணும் நாடுகள்
  1. ஜப்பான்
  2. இந்தியா(கேரளா)
  3. ஈரான்
  4. தென் கொரியா
  5. ரஷ்யா
  6. பிரான்ஸ்
  7. இஸ்ரேல்
  8. மெக்ஸிகோ
  9. கிரீஸ்
  10. இந்தியா(கர்நாடகா)
வாய்விட்டு சிரிப்பவர்களுக்கு அறிவு குறைவு என்பதை ஏற்காத நாடுகள்
  1. ஜேர்மனி
  2. சுவிட்சர்லாந்து
  3. மலேசியா
  4. சீனா
  5. ஆஸ்திரியா
  6. எகிப்து
  7. பிலிப்பைன்ஸ்
  8. பிரித்தானியா
  9. டென்மார்க்
  10. பிரேசில்
வாய்விட்டு சிரிப்பவர்கள் நேர்மையாக இருக்க மாட்டார்கள் என எண்ணும் நாடுகள்
  1. இந்தியா(கர்நாடாகா)
  2. அர்ஜெண்டினா
  3. மாலத்தீவுகள்
  4. இந்தோனேஷியா
  5. ஜிம்பாப்வே
  6. இந்தியா(கேரளா)
  7. ஈரான்

ஆகிய 7 நாடுகளை சேர்ந்த மக்கள் மட்டும் இவ்வாறு கருதுகின்றனர்.

வாய்விட்டு சிரிப்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என எண்ணும் நாடுகள்

இந்த பட்டியலில் சுமார் 37 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல் 10 நாடுகளை பார்ப்போம்.

  1. சுவிட்சர்லாந்து
  2. அவுஸ்திரேலியா
  3. பிலிப்பைன்ஸ்
  4. கொலம்பியா
  5. கிரீஸ்
  6. பிரித்தானியா
  7. போர்த்துகல்
  8. ஆஸ்திரியா
  9. இத்தாலி
  10. கனடா

இந்த ஆய்வின் முடிவில், ஒவ்வொரு நாட்டில் நிலவி வரும் கலாசாரம், பழக்கவழக்கம் மற்றும் அரசாங்க கட்டமைப்பில் உள்ள ஊழல்கள் என அனைத்து அம்சங்களும் மக்களின் குணாதிசயங்களை மாற்றுகின்றன.

எனினும், எந்த காரணத்தை முன் வைத்தாலும் சிரிப்பை வெளிக்காட்டாத நாடுகளுக்கு செல்ல வெளிநாட்டினர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என என Kuba Krys அந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: