ஆர்டிக் கடலுக்கடியில் கேட்கும் மர்ம ஓசைக்கு என்ன காரணம்?
Saturday, November 5th, 2016
ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை நாட்டின் இராணுவம் ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் பல மாதங்களாக இந்த ஓசை கேட்டு கொண்டிருக்கிறது.
பெரிய வாய் உடைய திமிங்கலம் மற்றும் சீல் எனப்படும் நீர் நாய்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்களை இந்த ஒலி அப்பகுதியிலிருந்து விரட்டியதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை கனட இராணுவ விமானங்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டன. ஆனால், “ஒலி ரீதியான முரண்பாடு” என்று அவர்கள் விவரித்த இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

Related posts:
ஸ்பெயினில் எருது விடும் விளையாட்டை நிறுத்துவதற்கு வலுக்கிறது எதிர்ப்பு!
பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்!
வைரலாகும் வதந்திகளை தடுக்க பேஸ்புக் தரும் அதிரடி வசதி!
|
|
|


